தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் மத்திய அமைச்சரவை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஒப்புதலை கொடுத்துள்ளது வரவேற்பு தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மண்டல் கமிஷன் அறிக்கையை கடுமையாக எதிர்த்தவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி. பல மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்ததன் காரணமாகவே அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டென நடக்கும் செயல் கிடையாது பொறுமையாக அதனை ஆராய்ந்து செய்ய வேண்டும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஜாதிப் பிரிவுகள் உள்ளது அதனை முறையாக கையாண்டு கணக்கெடுப்பை நடத்த வேண்டும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும். தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு 28 உறுப்பினர்கள் தேவை உள்ளது நாங்கள் நான்கு பேர் மட்டும்தான் இருக்கிறோம் ராஜ்யசபா இடங்களை எல்லாம் அதிமுக இடம் கேட்க முடியாது என தெரிவித்தார் தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான மனநிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து பொதுமக்களும் இருக்கின்றனர் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகும் தேர்தல் வர இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்குவோம் திமுக சீக்கிரமாக தேர்தல் வேலைகளை தொடங்கி சீக்கிரமாக வீட்டுக்கு போக போகிறார்கள் என தெரிவித்தார். இளைஞர்கள் மது பழக்கத்திற்கும் அடிமை, கஞ்சா போதை கிராமங்களில் அதிகமாக உள்ளது. ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.திராவிட மாடல் என்பது சொல்வதற்கும் செய்வதற்கும் நேர் மாறாக இருக்கும். தேர்தலை முன் வைத்தே திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது ,பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு 1000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது சட்டமன்ற தேர்தலை மனது வைத்து விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் என கூறி உள்ளனர்.
செய்தி மாடசாமி திருநெல்வேலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக