கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்


கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல் -வனத்துறை அறிவிப்பு!


கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றாலம் அருவி உள்ளது கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக கோவை குற்றாலத்துக்கு உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பார் ,கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கன மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad