கோவையில் அதிக மழை எச்சரிக்கை உள்ளதால் ஆற்றங்கரை ஓரம் பொதுமக்கள் செல்ல வேண்டாம் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார்..
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளின் சில இடங்களில் ஆங்காங்கே இன்று 24.5.25 கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்து ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது .அதற்கு அடுத்த 25, 26 ஆகிய இரண்டு நாட்களும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே உள்ள கன முதல் மிக கனமழையும் ,1-2 இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது .கோவையில் அதிக மழை எச்சரிக்கை உள்ளதால் ஆற்றங்கரை ஓரம் பொதுமக்கள் செல்ல வேண்டாம், மழை பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ள கோவை ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக