ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு
சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வடவள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் நடைபெற்றது. இப்பள்ளியின் முன்னாள் முதல்வர்.திரு.கணேசன் அவர்கள் இச்சிறப்பு பயிற்சி வகுப்பில் நற்கருத்துகளைப் பகிர்ந்தார். இப்பயிற்சி வகுப்பு ஆசிரியப்பெருமக்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. இப்பள்ளிகளின் பள்ளி முதல்வர்கள் திருமதி. உமாதேவி துரைசாமி அவர்கள் (வடவள்ளி) திருமதி. ஜெயலட்சுமி அவர்கள் (ஆர்.எஸ்.புரம்) இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு ஆசிரியப் பெருமக்களை ஊக்கமளித்தனர். சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியினர் அனைவருக்கும் உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக