இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒரு ஜூன் 20ஆம் தேதி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது ரோகித் சர்மா, விராட் கோலி ,ஆகியோ டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் புதிய வீரர்கள் கொண்ட அணி இந்த தொடரில் விளையாடுகிறார்கள், அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்று இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார், தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .அதே போன்று தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனுக்கு முதல்முறையாக இந்த டெஸ்ட் அணியில் இடம் கிடைத்திருக்கிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக