திருப்பூரில் இறந்த பீகார் மாநில கூலி தொழிலாளியின் உடலை எஸ் டி பி ஐ -மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் பீகாருக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாஸும் அகமது என்பவர் திருப்பூர் பாண்டி நகர் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் வசித்து வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்றைய முந்தினம் வீடு திரும்பிய நிலையில் இரவு 1:30 மணிக்கு இறந்து விட்டார் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கு எந்த வசதியும் இல்லாத நிலையில் பேரிடர் காலங்களில் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை தயங்காமல் முன் வந்து செய்யும் SDPI கட்சியினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் சலீம், யாசின், முன்னா, ஜாபிர் அஹமது, சபியுல்லா, சிராஜ், அப்பாஸ் மற்றும் இரண்டு கட்சியை சேர்ந்த சகோதரர்களும் ஆம்புலன்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத்தை ஏற்பாடு செய்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக