கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகர காய்கறி வியாபாரிகள் நல சங்கம் தலைவர் மணிவண்ணன் தலைமையில் சமாபந்தி நிறைவு விழாவில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விருத்தாசலம் நகர ஸ்ரீ அங்காளம்மன் காய்கறி வியாபாரிகளுக்கு, நிரந்தர கடை அமைத்து தர வேண்டும், காய்கறி மார்க்கெட்டை வாழ்வாதாரத்தை நம்பி, விருத்தாசலத்தை சுற்றி உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, நிரந்தர கடை அமைத்து தர வேண்டும் என சமாபந்தி அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளரிடம் ஆலோசனை செய்து, கள ஆய்வு மேற்கொண்டு, நிரந்தர கடைகளை, வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படும் என கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட காய்கறி சந்தை வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 50-க்கும் வியாபாரிகள் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதாச்சலம் செய்தியாளர் அலோசியஸ் தேவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக