கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி ஜெயந்தி விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 மே, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி ஜெயந்தி விழா

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி ஜெயந்தி விழா 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி அம்மன் ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு யாகம் வளர்த்து பால்குடம் எடுத்து அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது அம்மனுக்கு 102 கோத்திரம் பதிந்த வெள்ளி காசு மாலை அணிவிக்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக LVN பிரசாத் சேலம் அவர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு காசு மாலையை செலுத்தினார் இந்நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ் செட்டியார். இளைஞர் சங்கத் தலைவர் KG.சீனிவாசன். செயலாளர் PAR ரவிசங்கர். பொருளாளர் செந்தில்குமார்.மகிளா சங்கத் தலைவர் கிரிஜா கிருஷ்ணமூர்த்தி. செயலாளர் வைஜந்திமாலா மகேந்திரன். பொருளாளர் அனுராதா சீனிவாசன். இந்நிகழ்ச்சியின் கட்டளைதாரர்கள் பால்ராஜ் செட்டியார். தயானந்தன் செட்டியார். PA. ராஜேந்திரன் செட்டியார். PA. மகேந்திரன் செட்டியார். மற்றும் வாசவி கிளப் பொறுப்பாளர்கள்  GK. சரவணன். V. கமலக்கண்ணன். நமது நிருபர் GB. குருசாமி கலந்து கொண்டார்கள். சங்கராபுரத்தில் ஆரிய வைசிய சமூகத்தை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் மதியம் ஒரு மணி வரை விடுமுறை விடப்பட்டது மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆரிய வைசிய பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி மதிய உணவு வழங்கப்பட்டது.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad