திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உண்டான கலந்தாய்வு செய்யப்பட்டது இந்த நிகழ்வில் சிறப்பாக பணியாற்றி வெற்றி கண்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார் மேலும் நிர்வாகிகளும் பல்வேறு நற்காரியங்களுக்கு துணை நிற்கும் தொழிலாளர்களை விவசாய தோழர்களை நல்வழியில் செல்வதற்கு உண்டான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து அந்தப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க பல்வேறு ஆலோசனைகள் கூறுவதோடு மட்டும் இல்லாமல் தோளோடு தோளாக நின்று வழி நடத்தும் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட மாநகர வார்டு ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணி திரளாக கலந்து கொண்டு தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக