அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுக்கா தனியார் பள்ளி வாகனகள் சோதனை!
ராணிப்பேட்டை , மே 24
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழகம் முழுவதும் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளது. ஆகவே தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் பள்ளிகளின் வாகனங்கள் பரிசோதனை உட்படுத்த வேண்டும் என்பது அரசு உத்தரவு ஆகவே ஒவ்வொரு வருடம் வட்டார போக்கு வரத்து துறையால் இந்த பணி மேற் கொள்ளபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ராணிபேட்டையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டாரங்களில் உள்ளடக் கிய 29 பள்ளிகளின் 240 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டது. இதற் கான எளிய நிகழ்ச்சிக்கு அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர். வெங்கடேசன் தலைமை தாங்கி னார். அரக்கோணம் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர். செங்குட்டு வேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து (ஆர்டிஓ) அதிகாரி மோகன் மற்றும் தனியார் பள்ளிகளின் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர். சுதர்சன் பாபு தாலுக்கா காவல் ஆய்வாளர். பழனிவேல் மற்றும் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வாகன ஓட்டுனர்கள் எப்படி தீவிபத்தினை கையாள்வது குறித்து தீயணைப்பு துறை குழுவினர் தீ பாது காப்பு நடவடிக்கைகளை N. செயல் விளக்கமளித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு பேருந்துகளின் தர கட்டு பட்டை அதிகாரிகள் குழ சோதனையில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக