குடியாத்தம் அடுத்த சிங்கல்படி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கிராம குளம் அமைக்க இடம் தேர்வு!
குடியாத்தம் , மே 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 23/05/2025 அன்று நடைபெற்ற 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய த்தில் வருவாய் தீர்வாய அலுவலர், மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுகுழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர், குடியாத்தம் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்ட செய்தி தொடர் பாளர் கோப்பம்பட்டி மோ.பழனிவேலன், சிங்கல்பாடி ஊராட்சி மன்றம் தலைவர் ரா.கஜேந்திரன் வைத்த கோரிக்கையின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு சிங்கல்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் கிராம குளம் அமைய உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலை ஆதாரம் இடம் 24/05/2025 இன்று ஊராட்சி மன்றம் தலைவர் தலைமையில் ஊராட்சி மன்றம் செயலாளர் மேற் பார்வையில் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் மூலம் அளவீடு செய்து 74 சென்ட் நிலம் அடையாளம் காணப் பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகம்
மற்றும் துறை சார்ந்த அனைவருக்கும் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக