பேர்ணாம்பட்டு அடுத்த தரை காட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப் பள்ளிக்கு சொந்த கட்டிடம் வேண்டுமென்று கோரிக்கை!
பேரணாம்பட்டு ,மே 24 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த தரைக்காற்று பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உருது பள்ளி தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது இப் பள்ளியில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார் கள் இப் பள்ளியின் கட்டிட உரிமையாளர் கள் அவ்வப்போது காலி பண்ண சொல்வ தால் அடிக்கடி இடமாற்றம் செய்யப் படுகிறது இதனால் பள்ளி மாணவ மாண விகள் பெற்றோர்கள் உருது பள்ளிக்கு சொந்த கட்டிடம் தேவை என்று கோரிக் கை வைத்து வருகிறார்கள் இதில் அப்பகுதி வார்டு கவுன்சிலர் அத்திக் கூர்ரஹமான் தலைமையில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரண்டனர்
இந்தப் பள்ளிக்கு 20 5 2018 ஆண்டு எம் எம் இர்பான் என்பவர் சுமார் 26 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இடம் உறுதிப்பள்ளிக்கு வழங்குவதாக கூறி மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு கொடுத்துள்ளார் எனவே வாடகை கட்டி டத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய உருது துவக்க பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் மாணவ மாணவிகளின் பெற் றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இது சம்பந்தமாக கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக