சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் நல திட்ட உதவிகள் ! மற்றும் ஆலோசனை கூட்டம்!
கே வி குப்பம் , மே 25 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் லத்தேரி அடுத்த கலைஞர் நகர் பகுதியில் வசித்து வந்த கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் திரு யுவராஜ் அவர்கள் நெஞ்சு வலி காரணமாக வாகனம் ஓட்டும்போது இறந்து விட்டார். அவருடைய உடலை சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத் தின் மாவட்ட செயலாளர் A.சரவணன் அவர்கள் தலைமையில் கே வி குப்பம் பனமடங்கி பகுதியை சேர்ந்த மாவட்டத் துணைச் செயலாளர் M.குபேந்திரன் அவர்களின் உதவியுடன் ஓட்டுநரின் உடலை லத்தேரி பகுதியில் உள்ள கலைஞர் நகர் வசிக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது ஓட்டுநரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் மிகவும் மன வேதனை இருந்த போது, சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் வழங்கி அவருடைய ஈமச் சடங்குகள் செய்யப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மாநில அளவில் நடைபெற்ற சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத் தலைவர் லயன் தனலட்சுமி பொதுச் செயலாளர்
A.T. கண்ணன் தலைமை தாங்கி மாநில துணைச் செயலாளர் சரவணன் பங்கேற்று பல்வேறு நல திட்டங்கள் வழங்கப்பட்டது.அப்பொழுது வேலூர் மாவட்டத்திற்கு என தையில் இயந்திரம் வழங்கினர்.
மாவட்டத்திற்கு என்ற ஒதுக்கிய தையில் இயந்திரம் இன்று மாநில நிர்வாக செயலாளர் M.பாக்யராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் A. சரவணன் மாவட்ட துணைச்செயலாளர் M.குபேந்திரன் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் N. கோபி மற்றும் குடியாத்தம் நகர செயலாளர் S.ஆனந்தன் மற்றும் குடியாத்தம் நகர இளைஞரணி செயலா ளர் S.கருணாநிதி குடியாத்தம் நகர மகளிர் அணிசெயலாளர் S.கவிதா சரவணன் குடியாத்தம் ஒன்றிய இணைச் செயலாளர் M. தன்ராசு மற்றும் லத்தேரி காவல் நிலைய காவலர் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தையல் இயந்திரம் வழங்கப் பட்டது .சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது இதில் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக