ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024 26 ஆம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழுவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன்,, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் ஜோதி (செய்யார்) சட்டமன்ற தொகுதி சின்னப்பா (அரியலூர்) சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு அரசு முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர். முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு பொதுக் கோரிக்கைகள் தொடர்பான வரப்பட்ட 70 மனுக்கள் மீது மனுதாரர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்களில் 13 மனுக்கள் மீது நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டு உரிய தீர்வு வழங்கிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.பொதுவாக மனுக்கள் குழுவில் பெறப்பட்ட மனுக்களை குடிநீர் சேவை நிறைவேற்றுதல் சாலைகள் சீரமைத்தல் கம்மைகள் தூர்வார்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் பள்ளி கட்டடங்கள் மற்றும் மருத்துவமனை கட்டிடங்களுக்கு உட்கட்டமைகள் ஏற்படுத்துதல் வைகை ஆற்றில் இருந்து பாசன வசதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு போதிய அளவு தடுப்பணைகள் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை சரி செய்யவும் தமிழ்நாடு அரசு மனுக்கள் மீது ஒவ்வொரு கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சட்டமன்ற பேரவை மனு குழு உறுதி அளிக்கும் என தெரிவித்தார். மேலும் சாலைகள் சீரமைப்பு கண்மாய்கள் தூர்வார்தல் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிப்பதற்கு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு பரிந்துரை செய்யும் அதே போல் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் விரைந்து முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள சட்டமன்ற பேரவை மனு குழு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் இரா. கரு மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ்,, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் இரா கோவிந்தராஜுலு, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா இணைச் செயலாளர் இரா சாந்தி சார்பு செயலாளர் சந்தானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக