மேட்டுப்பாளையம் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

மேட்டுப்பாளையம் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

 


மேட்டுப்பாளையம் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு.


தென்மேற்கு பருவமழை அடுத்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அரை திறக்கப்பட்டுள்ளது. மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, 04254-222151 இந்த தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகராட்சி அலுவலர்கள் ,தீயணைப்பு துறையினர், மின்வாரிய அலுவலர்கள், போக்குவரத்து அலுவலர்கள் காவல்துறையினர், தன்னார்வ  தொண்டு நிறுவனத்தினர் ஒன்றிணைந்து தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad