துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் எட்டு மணி நேரம் தாமதம் என விமானநிலைய அதிகாரிகள் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் எட்டு மணி நேரம் தாமதம் என விமானநிலைய அதிகாரிகள் அறிவிப்பு.


துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் எட்டு மணி நேரம் தாமதம் என விமானநிலைய அதிகாரிகள் அறிவிப்பு.



மதுரையிலிருந்து துபாய் செல்ல 178 பயணிகள் காத்திருப்பு.


துபாயிலிருந்து தினமும் மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம்  பகல் 12:00 மணி அளவில் விமானம் மதுரை வந்தடையும்.


பின்னர் மதுரையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 12:30 மணிக்கு புறப்பட்டு  மாலை 3 மணிக்கு துபாய்க்கு செல்வது வழக்கம் .



இந்நிலையில் துபாயிலிருந்து மதுரைக்கு வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் காலை 12 மணிக்கு வருவது ரத்தாகி மீண்டும் மாலை 6 மணி என அறிவிக்கப்பட்டது.


தற்போது 8 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.


8 மணி நேரம் தாமதம் எனும் அறிவிக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர் -


மதுரையில் இருந்து துபாய் செல்வதற்கு 178 பயணிகள் புறப்பட டிக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது ஸ்பைஸ் ஜெட் விமானம் இரவு 8 மணிக்கு  செல்லும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


8 மணி நேரம் விமானம் தாமதம் என்பதால் எப்போது வரும்  பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad