மே 4 நவதிருப்பதிகளில் ஒன்பதாவது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் பொலிந்து நின்ற பிரான் உற்சவம் நடக்கிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 29 ந்தேதி தொடங்கியது.
5 ந் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 5.15 மணிக்கு திருமஞ்சனம். 6 மணிக்கு தீபாராதனை. 7
மணிக்கு நித்தியல் கோஷ்டி. 8.15 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் த காலை தோளுக்கினியானில்ரத வீதி புறப்பாடு நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான். சுவாமி நம்மாழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார்.
பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்காரம் செய்யப்பட்டு 7.30 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மாட வீதி ரதவீதி புறப்பாடு நடைபெற்றது. தினசரி மாலையில் யானை வாகனம் சந்திர பிரபை வாகனம் குதிரை வாகனம் வெட்டி வேர் சம்பவம் ஆகிய வாகனங்களில் ரத வீதி உலா நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன்.. பாலாஜி.விவேக். சுவாதி. எம்பெருமானார் ஜீயர். நிர்வாக அதிகாரி சதீஷ் தக்கார் ராமானுஜ( எ) கணேசன். கிரிதரன். காளிமுத்து. ராமலட்சுமி செந்தில். முன்னாள் கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மே 7ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக