அமைச்சர் முன்னிலையில் பா.ம.க ஊராட்சிமன்ற தலைவர் கழகத் தோழர் களுடன் தி.மு.கவில் இணைந்தார்!
திருப்பத்தூர் , மே 28 -
திருப்பத்தூர் மாவட்டம் பொதுப் பணி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங் கள் துறை அமைச்சர் எ வ வேலு அவர்கள் முன்னிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி அவர்கள் ஏற்பாட்டில், திருப்பத்தூர் தொகுதி, திம்மணாமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவரும், பாமக இளைஞர் அணி அமைப்பாளருமான C பாலாஜி அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமக தோழர்கள் இன்று தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண் டனர்.இந்த நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் C.N. அண்ணா துரை அவர்களும் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் K.தேவராஜ், திருப்பத் தூர் நகர கழக செயலாளர் S.ராஜேந்தி ரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கள் S.அரசு, ரகுநாத், திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் M.ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் காந்தி, கந்திலி ஒன்றிய கழக செயலாளர் மோகன்ராஜ், திருப்பத்தூர் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் இருந்தார்கள்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக