மானாமதுரையில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அதிமுகவில் இணைந்த 200 மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் மாபெரும் விழாவில் சிவகங்கை மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திரு பி. ஆர். செந்தில்நாதன் அவர்களின் தலைமையிலும், வழக்கறிஞர் இரா. சுரேஷ்பாபு அவர்களின் முன்னேற்பாட்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் ஏ. கே. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன், மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் நாகராஜ், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் தன் சார்பாகவும், சிவகங்கை மாவட்ட அஇஅதிமுக சார்பாகவும் சிறப்பாக பணியாற்றிட சட்டமன்ற உறுப்பினர் திரு பி. ஆர். செந்தில்நாதன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக மானாமதுரையில் உள்ள அண்ணா சிலைக்கு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மானாமதுரையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கறிஞர் திரு இரா. சுரேஷ்பாபு அவர்கள் தலைமையில் அமமுக கட்சியினர் முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் திரு கே. எடப்பாடி பழனிசாமி அவர்களை சேலத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி, வாழ்த்துக்கள் பெற்று அஇஅதிமுக கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக