ஆண்டுக் கணக்கில் பராமரிப்பின்றி இருந்து வரும் குருந்தங்குளம் பேருந்து நிறுத்த நிழற்குடையை சரி செய்ய முன் வருமா சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி?
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் குறுந்தங்குளம் பேருந்து நிறுத்த நிழற்குடையானது முட்புதர் அடைந்து பழுதான நிலையில் இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், "குருந்தங்குளம் பேருந்து நிறுத்த நிழற்குடையானது பல வருடங்களாக பழுதடைந்த நிலையில் புல், முட்புதர், கருவேலம் மற்றும் குப்பைகள் நிறைந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது தங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் வெயில் மற்றும் மலைக்கு சிறிது நேரம்கூட பாதுகாப்பாக நிழற்குடையில் நிற்க முடியாமல், சாலை அருகில் பாதுகாப்பற்ற சூழலில் தங்களின் பேருந்து பயணத்தை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே உடனடியாக பல ஆண்டுகளாக எந்த ஒரு பராமரிப்புமின்றி இருந்து வரும் நிழற்குடையை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூந்தங்குளம் கிராம பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தினர். மேலும் ஆண்டுக் கணக்கில் நிழற்குடையை பராமரிப்பு பணி மேற்கொள்ள தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை குறைந்தபட்சம் மாவட்ட ஆட்சியர் துறை ரீதியிலான பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்".

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக