ஸ்ரீமுஷ்ணம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் குடிநீர் மேல் நீர் தேக்க தொட்டி உடைந்து ஒழுகும் அவல நிலை
ஸ்ரீமுஷ்ணம் ஜூன் 29 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி ஊராட்சி புதுப்பாளையம் கிராமத்தில் சுமார் 15 குடும்பத்துக்கு மேல் வசித்து வரும் நிலையில் ஊராட்சி வளர்ச்சி துறையில் 2015 ஆம் ஆண்டு சுமார் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி ஆங்காங்கே உடைந்து குடிநீர் வெளியேறும் அவல நிலை குடிநீர் உள்ள பைப்புகள் அனைத்தும் உடைந்து பாசம் பிடித்து காணப்படுகிறது இதனால் இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு அடிக்கடி தொற்று நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து சுமார் பத்து ஆண்டுக்கு மேல் இந்த கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படவில்லை சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்நிலையில் அரசு அதிகாரிகள் நேரடி பார்வையிட்டு குடிநீர் தொட்டியை சரி செய்து அமைக்குமாறும் இங்குள்ள கிராமவாசிகள் வேண்டுகோள் வைத்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக