திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 ஜூன், 2025

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம்


திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் - மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!


திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த வடமதுரையை சேர்ந்த சாமிநாதன் மகன் மதன்(22) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் ஜூன் 24 இன்று விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், மதனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்,                               


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad