கீழ்படப்பை, சாலமங்கலம் பகுதிகளில் உயர்மட்ட நடைபாலம் அமைக்க வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 ஜூன், 2025

கீழ்படப்பை, சாலமங்கலம் பகுதிகளில் உயர்மட்ட நடைபாலம் அமைக்க வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்.


காஞ்சிபுரம், ஜூன் 24-

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் உள்ள கீழ்படப்பை மற்றும் சாலமங்கலம் பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் வாலாஜாபாத் – வண்டலூர் முக்கிய சாலையை ஒட்டி உள்ளன. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை கடந்துசெல்ல வேண்டி உள்ளது, ஒரகடம் பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளின் கனரக வாகனங்கள், பேருந்துகள், மணல் மற்றும் ஜல்லி லாரிகள், என போக்குவரத்து எப்போதும் அதிகமாக இந்த சாலையில் காணப்படும்.


இதனால், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சாலை கடக்க மிக சிரமப்படவேண்டியுள்ளது, இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த இரு பகுதிகளிலும் உயர்மட்ட நடைபாலம் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad