நாடுகானி ஜீன்பூல் தாவரவியல் மையத்தில் வனத்துறை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வனத்துறை பந்தலூர் வனசரகம் மற்றும் ஜீன்பூல் வனசரகத்தில் பணியாற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு வனத்துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியன சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வானவர் சுரேஷ்குமார், ஜீன்பூல் கண்காணிப்பாளர் கோமதி, நுகர்வோர் மைய நிர்வாகி ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் வனசரகர் சஞ்சீவி முகாமினை துவக்கி வைத்தார்.
இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் மருத்துவர் பாத்திலா தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. தேவையுள்ளவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.
முகாமில் பந்தலூர் வனசரக வானவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், ஜீன்பூல் கார்டன் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக