எந்த இடையூறும் இல்லாமல் ஒதுக்குப்புறமாக உள்ள குடிநீர் பானை, மண்பானை குடிநீர் முறையை அகற்ற நினைக்கும் திமுக அரசு!
வேலூர் , ஜூன் 24 -
மக்கள் குடிநீர் அருந்தி வருவதால் எடுக்க வேண்டாம் என அதிமுகவினர் எதிர்ப்பு!!
வேலூர் மாவட்டம், அண்ணா சாலை, ராஜா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் ஒதுக்குப்புறமாக யாருக்கும், எந்த இடை யூறும் இல்லாமல் ஓரமாக வைக்கப் பட்டுள்ள மண்பானை குடிநீர் பந்தலை அகற்ற வலியுறுத்தும் திமுக அரசு, இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் நூற்றுக்கும் மேற் பட்டோர் பள்ளிக் கல்லூரி மாணவ மாண விகள், பொதுமக்கள் என இந்த மண் பானையில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை அருந்தி இதனை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து திமுகவினர் தூண்டுதலில் இதனை அகற்ற முற்பட்ட போது, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித் தனர். பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் பானையை அகற்ற வேண்டாம் என அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாநகராட்சி ஆணையாளரிடம், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு மற்றும் நிர்வாகிகள் புகார் மனு கொடுத் துள்ளார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருவதையொட்டி சாலை பணிகள் துரித மாக நடைபெற்று வருகின்றன. சாலை யில் உள்ள தடுப்புகள் பேனர்கள் சில இடங்களில் அகற்றப்பட்டன வேலூர் பழைய மாநகராட்சி கட்டிடம் அருகில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் பந்தலை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது இதனால் அதிமுகவினர் இது ஒதுக்கப் புறமாக ஓரமாக உள்ளது எந்த இடையூ றும் இல்லை இதனை மக்கள் பயன் படுத்தி வருகின்றனர் எனவே இதனை அகற்ற வேண்டாம் என அதிமுக எஸ் ஆர்.கே.அப்பு மற்றும் பகுதி செயலாள ர்கள், பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமனிடம், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். இந்நிகழ்வின் போது மா மன்ற உறுப்பினர்கள் எழிலரசு,சரவணன், குப்புசாமி, அருணா விஜயகுமார், சந்திர சேகர், வெற்றிவேல், வழக்கறிஞர் அண்ணாமலை மற்றும் சுந்தர்ராஜ் என திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக