பாலியல் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு!
வேலூர் , ஜூன் 24 -
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு உட்கோட்டம், விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில், கடந்த 2019-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய எதிரி மணிவண்ணன், வ/49, த/பெ.சின்னபையன், இளவம்பாடி, அணைக்கட்டு என்பவருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவா ணன் அறிவுறுத்தலின்படி, அணைக்கட்டு உட்கோட்ட துணை காவல் கண்காணிப் பாளர் நந்தகுமார் வழிகாட்டுதலின்படி, வேலூர் தாலுக்கா வட்ட காவல் ஆய்வா ளர் சுபா மேற்பார்வையில் வழக்கினை சிறப்பாக விரைந்து நடத்தி இன்று 23.06.2025- தேதி, எதிரிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் ரூபாய்.30,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 06 மாத காலம் சிறை தண்டனை விதித்து மாண்பமை மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக