தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை போட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திருநெல்வேலி மாவட்டத்தின் சார்ந்த அவரது கட்சியினர் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளி சாலையில் மரங்களை நட்டு வளர்க்க முடிவு செய்தனர். மாவட்ட செயலாளர் மரிய ஜான் தலைமையில் 51 மரங்களையும் முறையாக நட்டு அதனை முழுமையாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழை, சுத்தமான காற்று, சமூக பலன், ஆகியவற்றை கருத்தில் கொண்டு மரங்கள் நடப்பட்டுள்ளது அனைத்து மரங்களும் பட்டுப் போகாமல் வளர்ப்பதற்கு ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக