கன்னிவாடி அருகே பார்க்கவ குல சுருதிமார் மூப்பனார் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம்!
திண்டுக்கல் கன்னிவாடி அருகே ஆலந்தூரான்பட்டி பரமசிவன் கோவிலில் திண்டுக்கல் மாவட்ட பார்க்கவ குல சுருதிமார் மூப்பனார் சமுதாய அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 23 இன்று தலைவர் உதயகுமார் தலைமையில் செயலாளர் ராசுமணியம், பொருளார் முத்தையா முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னிவாடி பகுதியில் G.K. மூப்பனார் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் 10 மற்றும் +2- ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது,
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரபாகரன், வழக்கறிஞர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து, புதுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், ராமையா, தங்கராஜ், பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி,கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக