வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சங்க துணைத்தலைவர் டி.எம்.கதிர்ஆனந்த் அவர்களுக்கு காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!
காட்பாடி , ஜூன் 23 -
வேலூர் மாவட்டம் ரெட்கிராஸ் சங்க
கிளை நிர்வாகக்குழு கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் அவர்களை காட்பாடி ரெட்கிராஸ் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்துகளையும் பாராட்டுகளை யும் தெரிவித்தனர். முன்னதாக தமிழ் நாடு அரசின் நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர் களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இன்று காட்பாடி ரெட்கிராஸ் அவைத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் ரெட்கிராஸ் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனி வாசன், மேலாண்மைக்குழு உறுப்பி னர்கள் டாக்டர் வீ.தீனபந்து, எஸ்.ரமேஷ் குமார் ஜெயின் செயலாளர் எஸ்.எஸ்.சிவ வடிவு உள்ளிட்டோர் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.அப்போது பேசிய சங்கத்தின் துணைத்தலைவர் மற்றும் வேலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பி னர் டி.எம்.கதிர்ஆனந்த் அவர்கள் ரெட்கி ராஸ் சங்க செயல்பாடுகளை மேலும் சிறப்பாக செயல்படுத்துவோம் காட்பாடி கிளை ரெட்கிராஸ் செயல்பாடுகள் சிறப் பாக உள்ளது என பாராட்டினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக