குறிஞ்சிப்பாடி அருகே பாச்சாரபாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டம் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பாச்சார பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் நெய்வேலி சட்டமன்றத் உறுப்பினர் சபா ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேசுவையில்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்துள்ளார் இத்திட்டத்தில்
பொதுமக்கள் அதிகாரிகளை நேரடியாக இச்சிறப்பு முகாமில் சந்தித்து அவர்களுக்கு தேவையான இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், மற்றும் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த மனுக்களை நேரடியாக வழங்கி உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்
மேலும் முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரசின் திட்டங்களை காட்சிப்படுத்தும் விதமாக தற்காலிக ஸ்டால்கள் அமைக்கப்பட்டது
மேலும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது
நிகழ்வில் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்ண திரளாக கலந்து கொண்டு ஆர்வத்துடன் மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக