காந்திஜி நகரில் மழை நீறுடன் வடிகால் நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

காந்திஜி நகரில் மழை நீறுடன் வடிகால் நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


காந்திஜி நகரில் மழை நீறுடன் வடிகால் நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட மானாமதுரை தாயமங்கலம் சாலை 10வது வார்டு காந்திஜி நகர் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் வடிகால் நீர் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருவின் சாலைகளில் சூழ்ந்து கொண்டதால் துர்நாற்றம் ஏற்பட்டு வார்டு பொதுமக்கள் நோய் தொற்று ஏற்பட்டு கடமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் வசித்து வரும் நிலையில் வீடுகளுக்குள் வடிகால் நீர் புகுந்து கொண்டதால் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையில், பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பொறுமை இழந்த வார்டு பொதுமக்கள், தங்கள் வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளான வடிகால் மற்றும் சாலை வசதிகளை செய்துதர வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad