குடியாத்தம் நகர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இன்று அதிரடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

குடியாத்தம் நகர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இன்று அதிரடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி!

குடியாத்தம் நகர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இன்று அதிரடியாக நடவடிக்கை எடுத்த  நகராட்சி!
குடியாத்தம் , ஜூன் 11 -

 நகராட்சியில் 101 நாய்களுக்கு தடுப்பூசி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி யில் தெருக்களில் சுற்றித் திரியும் 101-நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி புதன் கிழமை செலுத்தப்பட்டது. குடியாத்தம் நகரில் சாலைகளில் செல்லும் பொது மக்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரையும் தெரு நாய்கள் கடித்து துன்புறுத்தி வந்தன.இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் நகராட்சி நிர்வாகத்து க்கு வரப்பெற்றன. நகர்மன்ற கூட்டங்க ளில் உறுப்பினர்கள் ஆட்டோ பி.மோகன், ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ஏ.தண்ட பாணி உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பி னர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.தெருநாய்களை பிடிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளது என அதிகாரிகள் கூறி வந்தனர்.இந்நிலையில் நகர்மன்றத் தலைவர் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையர் எம்.மங்கையர்க்கரசன் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால், சென்னையைச்  சேர்ந்த தமிழ்நாடு விலங்கியல் நல வாரிய அலுவலர்கள் குடியாத்தம் வந்து நகராட்சிப் பணி யாளர்களுக்கு பாதுகாப்பாக நாய்களை பிடிப்பதற்கு பயிற்சி அளித்தனர்.
பிடிபட்ட நாய்களுக்கு கால்நடைத் துறையினர் வெறி நோய் தடுப்பூசி
செலுத்தினர்.இதையடுத்து நகராட்சிப் பணியாளர்கள், கால்நடைத் துறையினர் என 40- க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை சித்தூர்கேட், தரணம்பேட்டை, புவனேஸ் வரி  பேட்டை, கஸ்பா உள்ளிட்ட பகுதி களில் 101- தெரு நாய்களை பிடித்துவெறி நோய் தடுப்பூசி செலுத்தினர்தொடர்ந்து  நகரில் உள்ள 36- வார்டுகளிலும் தெருக் களில் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். மேலும் 36 வார்டுகளில் உள்ள நாய்களை பிடித்து தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று தெரிவித்தனர்

குடியாத்தம் தாலுக்கா
செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad