வேலூர் வாசகர் வட்டம் சார்பில் ஜோசப் அன்னையா தொகுத்த இன்றைய கல்வி முறையால் கற்றதும் பெற்றதும் நூல் வெளியீட்டு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

வேலூர் வாசகர் வட்டம் சார்பில் ஜோசப் அன்னையா தொகுத்த இன்றைய கல்வி முறையால் கற்றதும் பெற்றதும் நூல் வெளியீட்டு விழா!

வேலூர் வாசகர் வட்டம் சார்பில் ஜோசப் அன்னையா தொகுத்த இன்றைய கல்வி முறையால் கற்றதும் பெற்றதும் நூல் வெளியீட்டு விழா!
வேலூர் , ஜூன் ‌7 -

வேலூர் வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் தமிழ்நாடு அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் நூலாசிரியர்  ஆ.ஜோசப் அன்னையா தொகுத்த இன்றை கல்விமுறையால் கற்றதும் பெற்றதும் என்ற நூலினை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாநிலத்தலைவர் மு.மணிமே கலை வெளியிட்டார்.இதற்கான விழா வேலூர் செழியன் அரங்கில் 07.06.2025 காலை 10.30 மணியளவில்நடைபெற்றது.
விழாவிற்கு ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் கே.பாண்டியன் தலைமைதாங்கி னார்.  முன்னதாக கவிஞர் இராஜன் பாபு வரவேற்று பேசினார்.நல்நூலகர்ஜெ.ரவி,  டி.பன்னீர்செல்வம், ஜெயபால் ஶ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலை பெற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் முனைவர்ச.இலக்குமிபதி, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் கள் செ.நா.ஜனார்த்தனன், ச.டேவிட் ராஜன்  ஜாக்டோ செய்தித்தொடர்பாளர் வாரா, பேராசிரியர் முனைவர் பொன் செல்வகுமார், மருத்துவர் ப.அருள்பாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நூலாசிரி யர்கள் தா.சிலம்பரசி, கா.தெய்வசிகா மணி, ஆர்.செல்வராணி, மு.தினேஷ் குமார், ம.க.இராம்பாபு, ச.பு.வெங்கட் ராமன் ம.சுமங்கலி, ஜெ,பூவிழி, ம.சுமங் கலி,மா.வசந்தா,கி,பானுரேகா,ஆ.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் நூலாசிரியர் நல்லாசிரியர் ஆ.ஜோசப் அன்னையா ஏற்புறையாற்றி நன்றி கூறினார்.இன்றைய கல்விமுறை யால் கற்றதும் பெற்றதும் என்ற நூல் ஆசிரிய பெருமக்களின் உணர்வுகள் எதிர்பார்ப்புகள், அனுபவிக்கும் கஷ்டங் கள் நெருக்கடிகள், அனைத்யும் உள் வாங்கி ஒரு தனி மனிதனாக நாடு முழுக்க போர் குரல் எழுப்பி வருபவர் ஆசிரியர் ஜோசப் அன்னையா மேலும் இந்த நூல் சிறிய நூலாக இருந்தாலும் அரிய நூலாகவும் சிந்தனையைத் தூண்டும் நூலாகவும் அமைந்துள்ளது.  தமிழ்ச்செம்மல் கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி மற்றும் பேராசிரியர் பொன்.செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலினால் இந்த நூல் எழுதப்பட்டது என்றும் கல்வி சார்ந்த அனுபவம் கொண்டுவர உதவிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மு.மணிமேகலை, பொதுச்செயலாளர் ச.மயில் ஆகியோரு க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad