திருப்பூரில் அருள்மிகு சற்குரு பகவான் ஞான சபை சார்பில் தினமும் அன்னதானம் கணக்கம்பட்டி சித்தர் சற்குரு பகவான் அவர்களின் புண்ணியம் செய் கருமம் தீரும் என்ற வாக்குக்கு படி திருப்பூர் பாண்டியன் நகரில் தினமும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது பழனி பகுதியை சேர்ந்த சூர்யா தனது இளம் வயதிலேயே கணக்கம்பட்டி சித்தரை குருவாக ஏற்று கொண்டு சுமார் 15 வருடம் அவருடன் பயணித்துள்ளார் கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி அடைந்தபின் அவரின் வாக்குப்படி ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றும் சிறந்த சேவையை திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஆசிரமம் மற்றும் கோயில் அமைத்து தினமும் மதிய நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார் இந்த உணவு சேவையை வழங்குவது கணக்கம்பட்டி சித்தர் தான் நான் அல்ல நான் அவருடைய பணியாளர் சீடன் மட்டுமே என்று சூர்யா கூறினார் தற்போது கணக்குப் படி 27 வருட காலம் கணக்கம்பட்டி சித்தருடைய வழியில் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். அவர் பொருளாதார சிக்கலில் இருந்தாலும் யாரிடமும் கையேந்தாமல் இந்த சேவை நடந்து வருவதற்கு கணக்கம்பட்டி சித்தரின் நல்லாசி தான் என்று கூறினார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக