ஜவுளி வார சந்தையில்.. மொத்த விற்பனை மந்தம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

ஜவுளி வார சந்தையில்.. மொத்த விற்பனை மந்தம்



ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது. இதுதவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.


தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.


ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் வெறும் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. அதேசமயம் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் சில்லறை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இந்த வார ஜவுளி மார்கெட்டுக்கு உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிக அளவில் இருந்தது.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad