தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 ஜூன், 2025

தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

 


தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..


தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  


தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், உதவி தலைமையாசிரியர் பாக்கியலட்சுமி அனைவரையும் வரவேற்றார். 


சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்ட தேனாடுகம்பை உதவி ஆய்வாளர் மகேஷ் போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்  குறித்து உரையாற்றினார்


 தலைமையாசிரியர் பார்வதி தலைமை வகித்தார். மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும்  அகலார்  முதல் தூனேரி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


 புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். 


முதுகலை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் நன்றி நவில, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad