சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பவளவிழா முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக திறந்தவெளி இறகுப்பந்து வளாகம் திறப்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இன்று பவள விழா முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக திறந்தவெளி இறகுப்பந்து வளாகம் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்கத்தினரால் உருவாக்கப்பட்ட இந்த திறந்தவெளி இறகுப்பந்து வளாகத் திறப்பு விழாவிற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் நிலோபர் பேகம் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும், மேனாள் துணைவேந்தருமான முனைவர் சுப்பையா மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் தடகள வீரருமான துரைசிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, புவி அமைப்பியல் துறைத் தலைவர் முனைவர் உதய கணேசன், தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவல்லி, இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கவிதா, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார் மற்றும் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்களும், ஆசிரியர்களும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க செயலாளரும், நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியின் முதல்வருமான முனைவர் சந்திரமோகன், பொருளாளர் நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக