திண்டுக்கல்லில் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 ஜூன், 2025

திண்டுக்கல்லில் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி


திண்டுக்கல்லில் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி!                              

திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை சார்பாக ஜூன் 26 இன்று சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு


திண்டுக்கல் GTN கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு DSP.முருகன் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். மேலும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.


இந்நிகழ்வில் போதைப்பொருள் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சரவணன், மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு போலீசார்,  கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,               


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி. கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad