இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை திருப்பூரில் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 ஜூன், 2025

இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை திருப்பூரில் பரபரப்பு



திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி அவர் வீட்டு அருகே ஓட ஓட வெட்டிக்கொலை இதனால் திருப்பூரில் பரபரப்பாக காணப்பட்டது

திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதியை சேர்ந்த பாலமுருகன் வயது(30) இவர் இந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினராக இருந்தார் நிதி நிறுவனம் ஒன்றை இவர் நடத்தி வருகின்றார் இந்த நிலையில் அவர் வீட்டு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இந்த நிலையில் வடக்கு மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்துள்ளனர் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது முழுமையான விசாரணைக்கு பிறகு சம்பவத்தின் முக்கிய காரணம் என்னவென்று தெரியவரும் மேலும் சிலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad