வடலூர் நகராட்சி அலுவலகத்தில்
நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வடலூர் நான்கு முறை சந்திப்பு பகுதியில் உள்ள தேசிய தலைவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர்
விஜய் ஆனந்த் தலைமையில்
வடலூர் நகராட்சி ஆணையர் பானுமதி, நகர மன்ற தலைவர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு
வடலூர் பகுதியில் உள்ள அனைத்து அரசியலமை கட்சியினருக்கும் அழைப்பு விடுபட்ட நிலையில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இக்கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் கூட்டத்தில் வடலூரில் உள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
புதிதாக காமராஜர் மற்றும் எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அண்ணல் அம்பேத்கர் சிலையை வேறு இடத்திற்கு மாற்றினால் சிலையின் மேலே அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு கூண்டுகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது இந்தக் கூட்டத்தின் இறுதியில் தலைவர்களின் சிலையை வடலூர் கடலூர் சாலையில் உள்ள பூங்கா அருகே மாற்றி அமைக்கப்படும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக