வேலூரில், அரசு மருத்துவமனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு!
வேலூர் , ஜூன் 25 -
கொந்தளிப்பில் வேலூர் மாவட்ட பொதுமக்கள்.
அவசர அவசரமாக திறந்து வைத்ததால் உள்ளே குடிநீர் வசதி இல்லை, மற்றும் உயர்ரக மருத்துவ வசதிக்கு ஏற்ப இயந்தி ரங்கள் பொருத்த வில்லை எப்படி மருத்து வம் பார்ப்பார்கள் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
வேலூர் மாவட்டம், வேலூர் கொசப் பேட்டை, வேலூர் பழைய அரசு மருத்து வமனை இடத்தில், தமிழ்நாடு முதலமை ச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், அரசு
பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு ள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த விழாவில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமலு, கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் சுனில் குமார், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா ளர் முனைவர் ப.செந்தில்குமார், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் இந்த மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக