நெய்வேலியில் சமையல் செய்த போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டதால் வீடு முற்றிலுமாக எரிந்த சாம்பல் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 30 இளங்கோ நகர் பகுதியை வசித்து வருபவர் சுந்தரி விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த நிர்வாகியான இவருக்கு சாரதி ஜெகதீஸ்வரன் என இரு மகன்கள் உள்ளனர்
இந்நிலையில் சமையல் செய்வதற்காக கூலி தொழிலாளியான சுந்தரி கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாரவு விதமாக சிலிண்டர் குழாயில் கேஸ் கசிவு ஏற்பட்டதால் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது
இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் நெய்வேலி தர்மல் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் நெய்வேலி தீயணைப்புத் துறையினர் மற்றும் நெய்வேலி தெர்மல் போலீசார் அங்கு சென்று தீயை அணைக்க முற்பட்ட பொழுது எதிர்பாராத விதமாக சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீடுட்டின் தகரக் கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தது உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்தது இச்சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையல் செய்ய முற்பட்ட பொழுது சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் தீ பற்றி திடீரென வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக