நெய்வேலியில் குறிஞ்சி நில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஆர்ச் கேட் எதிரில் குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் வெங்கடேசன் தலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
குறிஞ்சி நில மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார்
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் கூட்டத்தில்
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் மதுரை சத்தியமங்கலத்தில் வசித்து வந்த நரிக்குறவர்களை அழைத்து வந்து இவர்கள்தான் தமிழ் சமூகம் எனவும் பூர்வ குடிமக்கள் எனவும் முருகனுக்கு பெண் கொடுத்த சமூகம் நரிக்குறவர் சமூகம் என பதிவு செய்துள்ளார்
இது முற்றிலும் தவறு முருகனுக்கும் வணங்க உரிமை கொண்டாட குறிஞ்சி நில மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு எனவும் வரலாற்றை தவறாக பேசி நரி நரிக்குற மக்களுக்கும் மலை குறவர் இன மக்களுக்கும் இடையே பெரும் கலவரத்தை தூண்டும் விதமாக பேசி உள்ளார் இதனை குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மழை குறவர் சங்க மாநிலத் தலைவர் பூராசாமி பொதுக்குழு உறுப்பினர் வேட்டைக்காரன் நிர்வாகிகள் மணிகண்டன் விஜயகுமார்
லஷ்மி சரோஜா உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தனுஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக