காதலை ஏற்க்காமல் மகளை கொலை செய்த தந்தை மகளை கொலை செய்த தந்தை கடலூர் மாவட்டத்தில் மகளின் காதல் விவகாரம் பிடிக்காத தந்தை பெற்ற மகளையே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே T.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயதான அர்ஜுனன் கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் அபிதா காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தந்தை அர்ஜுனன் மகளுக்கு திருமணம் முடிக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக வரன் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அபிதாக்கு வேறு ஒரு ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டுள்ளது
இதற்கு தந்தை அர்ஜுனன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தந்தையின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து அபிதா அந்த இளைஞருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது, அதே நேரம் தந்தை பார்த்து வந்த வரன்களையும் அபிதா தட்டிக் கழித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் வீட்டில் இருந்த அபிதாவிடம்
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் மகளின் அத்துமீறிய பேச்சைக் கேட்டு ஆத்திரம் தலைக்கேறிய அர்ஜுனன் பெற்ற மகள் என்றும் பாராமல் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து சற்றும் எதிர்பாராத சூழலில் அபிதாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்தம் கொட்டிய நிலையில் கழுத்தை பிடித்துக் கொண்டு இரத்தவெள்ளத்தில் அப்படியே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அபிதா.
கொலை செய்துவிட்டு கையை கழுவிட்டு அங்கிருந்து சென்ற அர்ஜுனன் நேராக மது கடைக்கு சென்றுள்ளார் மதுபாட்டிலை வாங்கி குடித்த அர்ஜுனன் போதை அதிகமான நிலையில் அருகே உள்ள புத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று தான் கொலை செய்து விட்டதாகக் கூறி சரணடைந்திருக்கிறார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற டிஎஸ்பி விஜிகுமார் மற்றும் போலீசார் கொலை நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்
மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்தனர். மகளின் காதலை ஏற்காத தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு செய்தியாளர்
p ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக