குறிஞ்சிப்பாடி அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி கன்னாங்குட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலில் தீமிதி திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தீமிதி திருவிழாவானது அம்மன் வீதியுலா, துவங்கி, அடுத்தடுத்த தினங்களில்,
பகாசூரன் அன்னமிடல், அர்ச்சுனன் வீல் வளைத்தல் மற்றும் அர்ச்சுணன் தவசு மற்றும் திரோபதி திருகல்யாணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஐந்தாம் நாள் விழாவாக தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றும் விதமாக தீ குண்டத்தில் இறங்கினர் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனர் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக