கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது சமூக நலத்துறை மற்றும் ஆல் தி சில்ட்ரன் அமைப்பு ஆகியன சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ட்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார்
கூடலூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் பேசும்போது
கைம்பெண்களுக்கு அரசு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய பணி நியமனம் செய்யும் போது முன்னுரிமை, சலுகைகள் வழங்கப்படுகிறது. போட்டி தேர்வுக்கு படித்து அரசு வேலைக்கு வர முயற்சிக்க வேண்டும். கைம்பெண்கள் பலர் உரிய சான்றுகள் பெற்று சமர்ப்பிக்காமல் செல்வதால் உரிய பயன்கள் கிடைப்பதில்லை. கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, கைம்பெண்கள் சான்று, வட்டாட்சியரிடமும் ஆதரவற்ற கைம்பெண் சான்று வருவாய் கோட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இறப்புச் சான்று, வாரிசு சான்று உள்ளிட்டவை பெற்று அடிப்படையில் கணவனின் சொத்து உரிமைகள் பெற முடியும். அதுமட்டுமின்றி அரசினுடைய இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களிலும் கைம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவும் முன்வர வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கைம்பெண்களுக்கு வாழ்க்கையில் முன்னேற உதவியாக மத்திய அரசின் முத்ரா தொழில் முனைவோர் திட்டம், தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உள்ளிட்டவை மூலம் பதிவு செய்து கடனுதவி பெற்று முன்னேற முடியும். மேலும் கைம்பெண்கள் நல வாரியம் மூலமும் பதிவு செய்து சமூக நலத்துறை மூலம் இலவச தையல் இயந்திரம், சீருடை தைப்பதற்கான வாய்ப்புகள், சுயதொழில் முனைவு உள்ளிட்டவை பெற முடியும். மனம் தளராமல் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன்னேற வேண்டும். என்றார்.
சமூக நல துறை பணியாளர்கள் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக