கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் அருண் அறிவுறுத்தலின் பேரில் தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும்,18 வயது குறைவான குழந்தைகள் மோட்டார் வாகனங்களை இயக்க கூடாது எனவும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது பெற்றோர்களும் குழந்தைகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் எனவும்
குறித்தும் மாணவர்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் S.பால வசீகரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக