ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி.. ராணிப்பேட்டையில் முன்னாள் முப்படை வீரர்கள் மூவர்ணக் கொடி பேரணி!
ராணிப்பேட்டை , ஜீன் 01 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில்,ராணிப்பேட்டையில்,முன்னாள் முப்படை வீரர்களின் மூவர்ணக்கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியைக் கொண்டாடும் வகை யில்,ராணிப்பேட்டை நகரில் முன்னாள் முப்படை வீரர்கள் பங்கேற்ற மூவர்ணக் கொடி பேரணி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை நவல்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங் கிய மூவர்ணக்கொடி பேரணி சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று முத்துகடை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்கம் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தாருந்த நிகழ்வில் வாலாஜா, ஆற்காடு வட்ட முன்னாள் முப்படை வீரர் நல சங்க நிர்வாகிகள், அனைத்து முன்னாள் முப்படை வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களையும், வீர வணக்கத்தையும் தெரிவித்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக