ஜி ஆர் பாக்சிங் அகாடமி சார்பில் கோடைகால குத்து சண்டை பயிற்சி நிறைவு விழா! வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 ஜூன், 2025

ஜி ஆர் பாக்சிங் அகாடமி சார்பில் கோடைகால குத்து சண்டை பயிற்சி நிறைவு விழா! வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்!

ஜி ஆர் பாக்சிங் அகாடமி சார்பில் கோடைகால குத்து சண்டை பயிற்சி நிறைவு விழா! வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்!

திருப்பத்தூர் , ஜுன் 01 -

திருப்பத்தூரில் ஜி ஆர் பாக்சிங் அகடமி சார்பாக கோடைகால குத்துச்சண்டை பயிற்சி இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்கள் அசத்தல் ! தேசிய மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்  பகுதியில் ஜி ஆர் பாக்சிங் அகடமி நிறுவனத்தை மாஸ்டர் கிரிதரன் தலைமையில் நடைபெற்று கொண்டு வருகிறது மேலும் இன்று திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவிலில் நடைபெற்ற ஜி ஆர் பாக்சிங் அகடாமி இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் மாணவர் களுக்கிடையே பாக்சிங் போட்டி நடை பெற்றது. அதனை தொடர்ந்து தேசிய, மாநில, மற்றும் மாவட்ட அளவில் நடை பெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி னார்கள். இந்தநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் பி.யூதா, ஆசிரியர் பி. ஏசுராஜ் கலந்துகொண்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர் .
மேலும்  50க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்களை தயார் செய்து வரும்  ஜி ஆர் பாக்சிங் அகடமி பயிற்சி நிறுவனத்தை ஒரு சேவையாக செய்து வரும் மாஸ்டர்  கிரிதரனுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தியாளர் 
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad