திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 14 ஆவது வார்டு பிரசாத் வீதியில் அமைந்துள்ள திருப்பூர் மாநகராட்சி நூற்றாண்டு விழா துவக்க பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றது பள்ளியின் சிறப்பு அம்சங்கள் யோகா, மற்றும் கராத்தே பயிற்சி, கையெழுத்து பயிற்சி, கணினி வழி கல்வி, பாரம்பரிய கலை பயிற்சி, மாணவர்களின் தனித்திறனில் சிறப்பு பயிற்சி,
பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அரசால் வழங்கப்படும் விலையில்லா பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வசதி சுகாதாரமான கழிப்பிட வசதி, அடிப்படை வசதிகள் கொண்ட நவீன வண்ணமயமான வகுப்பறைகள், மாணவர்கள் நலனின் தனிப்பட்ட கவனம், வட்டார வள மைய அளவில் அறிவியல் கண்காட்சியில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளி மற்றும் காலை உணவு மதிய உணவு வழங்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த பள்ளியின் சிறப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாகவும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் விதமாகவும் விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியர் கே ஞானலட்சுமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மு.ரத்தினசாமி பொருளாளர் மணிமாறன் மற்றும் எஸ் எம் சி தலைவர் மோகனா தேவி மற்றும் எஸ் எம் சி உறுப்பினர்கள் ஆசிரியப் பெருமக்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் ரோடு மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் பேரணியாக சென்று பொதுமக்களை சந்தித்து பள்ளியின் சிறப்புகளையும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கும் சலுகைகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக